லத்தூர் ஒன்றிய குழுதலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது


லத்தூர் ஒன்றிய குழுதலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 30 Nov 2021 3:39 PM IST (Updated: 2 Dec 2021 5:15 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றிய குழுதலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது.

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றிய குழுதலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று லத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஒன்றியத்தில் மொத்தம் 15 ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளனர். தி.மு.க. சார்பில் 10 பேரும், அ.தி.மு.க. சார்பில் 5 பேரும் உள்ளனர்.

இதில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முகையூர் எம்.எஸ்.பாபுவின் மனைவி சுபலட்சுமி பாபு 9 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று ஒன்றிய குழுதலைவராக வெற்றி பெற்றார். துணைத்தலைவராக செய்யூர் கிராமத்தை சேர்ந்த தணிகாசலம் (தி.மு.க.) என்பவரது மனைவி கிருஷ்ணவேணி தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்ற இருவருக்கும் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story