சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்


சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 Nov 2021 6:06 PM IST (Updated: 30 Nov 2021 6:06 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசின் சிறுபான்மையினருக்கான பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் மற்றும் தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் அனைவரும் இன்று தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் 30.11.2021-க்குள் உடனடியாக புதுப்பித்து அதற்கான விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும் புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமான சான்று சமர்ப்பிக்க அவசியமில்லை. ஆதார் விவரங்களில் பெயர் மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனைத்து கல்வி நிலையங்களும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியுள்ள மாணவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு இணையத்தில் இன்றைக்குள் புதுப்பிக்க அறிவுறுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story