மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துயரத்தில்தொழிலாளி தற்கொலை + "||" + susait

தாய் இறந்த துயரத்தில்தொழிலாளி தற்கொலை

தாய் இறந்த துயரத்தில்தொழிலாளி தற்கொலை
கோபி அருகே தாய் இறந்த துயரத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோபி அருகே தாய் இறந்த துயரத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாய் இறந்தார்
கோபி அருகே உள்ள செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். அவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 34). திருமணம் ஆகாதவர். கூலி வேலை செய்து வந்தார்.
கோபாலகிருஷ்ணனின் தாய் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் கோபாலகிருஷ்ணன் தந்தையுடன் வசித்து வந்தார். தாய் இறந்ததால் கோபாலகிருஷ்ணன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
தூக்குப்போட்டு் தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் உள்ள கொக்கியில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கோபாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
----

தொடர்புடைய செய்திகள்

1. பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்ட தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தூக்குப்போட்டு மாணவி தற்கொலை
மதுரை கே.புதூரில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. பெண் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
பெண் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. விஷம் குடித்து தற்கொலை: மாணவி சம்பந்தமான வீடியோவை பதிவு செய்தவர், இன்று போலீசில் ஆஜராக வேண்டும்
பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவர் சம்பந்தமான வீடியோவை பதிவு செய்தவர் இன்று (செவ்வாய்க்கிழமை) போலீஸ் துணை சூப்பிரண்டு முன்பு ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
5. ஆய்வக உதவியாளர் தற்கொலை
அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தற்கொலை செய்துகொண்டார்.