கோவையில் 109 பேருக்கு கொரோனா
கோவையில் 109 பேருக்கு கொரோனா
கோவை
கோவையில் நேற்றுமுன்தினம் 106 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் சுகாதார துறையினர் வெளியிட்ட பட்டியல் படி கோவையில் நேற்று 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 179 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 109 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதன் மூலம் இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 482 பேர் குணமடைந்து உள்ளனர். கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 70 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்து 464 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது 1,233 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story