கிணத்துக்கடவில் மழையால் தக்காளி செடிகள் கருகின


கிணத்துக்கடவில் மழையால் தக்காளி செடிகள் கருகின
x
தினத்தந்தி 30 Nov 2021 10:34 PM IST (Updated: 30 Nov 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் மழையால் தக்காளி செடிகள் கருகின

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் மழையால் தக்காளி செடிகள் கருகியதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். 

தக்காளி சாகுபடி 

கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளான சொக் கனூர், நெம்பர் 10 முத்தூர், வடபுதூர், கல்லாபுரம், சூலக்கல், கோதவாடி, முத்துக்கவுண்டனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் தக்காளி சாகுபடி செய்யப் பட்டு வருகிறது. 

தற்போது பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அது போன்று கிணத்துக்கடவு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள தக்காளி செடிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

செடிகள் கருகின

தொடர் மழை காரணமாக தக்காளி செடிகளில் பூத்து இருந்த பூக்கள், காய்கள் உதிர்ந்து கீழே விழுந்தன. அத்துடன் செடிகளும் கருகிவிட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். 

எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து கருகிய தக்காளி செடி களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

 கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சே்ாந்த விவசாயிகள் வருடத்துக்கு 2 முறை தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறார்கள். 8 மாதம் கொண்ட பயிரான தக்காளியில் 8 முறை தக்காளி அறுவடை செய்யலாம்.

கடந்த மே மாதம் சாகுபடி செய்யப்பட்டு இருந்த தக்காளியில் தற்போது 6 முறை அறுவடை செய்து உள்ளோம். இன்னும் 2 முறை அறுவடை செய்யலாம். ஆனால் அதற்குள் மழை காரணமாக செடிகள் கருகிவிட்டன. அதுபோன்று காய்ப்புக்கு தயாரான செடிகளும் கருகிவிட்ட தால் பெரிதும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இழப்பீடு வழங்க வேண்டும்

தற்போது தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வரும் நேரத்தில் இதுபோன்று செடிகள் கருகியதால் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, தற்போது சாகுபடி செய்து இருந்த தக்காளியில் எவ்வித பாதிப்பும் இல்லை. கடந்த மே மாதத்தில் சாகுபடி செய்து இருந்த தக்காளியில்தான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனினும் இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றனர். 


Next Story