10 ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது
10 ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது
பொள்ளாச்சி
ஆசைவார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி திரு மணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப் பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவி மாயம்
பொள்ளாச்சியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன் காணவில்லை. அக்கம் பக்கத்தினர், உறவினர் கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீ சார் காணவில்லை என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
போக்சோவில் கைது
அதில் ஆனைமலையை சேர்ந்த தொழிலாளியான சபரீஸ்வரன் (23) என்பவர் அந்த மாணவியை காதலித்து வந்ததும், திருமண ஆசைவார்த்தை கூறி அவரை நாமக்கல்லுக்கு கடத்திச்சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சபரீஸ்வரன் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மற்றொரு வழக்கு
அதுபோன்று பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். அவரை கடந்த செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை.
இது குறித்த புகாரின்பேரில் கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், அந்த சிறுமியை கோட்டூரை சேர்ந்த மணிமுத்து (24) என்பவர் திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் மணிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story