அனுமதியின்றி செயல்பட்ட மருத்துவ ஆய்வகத்துக்கு சீல்


அனுமதியின்றி செயல்பட்ட மருத்துவ ஆய்வகத்துக்கு சீல்
x
தினத்தந்தி 30 Nov 2021 10:42 PM IST (Updated: 30 Nov 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி செயல்பட்ட மருத்துவ ஆய்வகத்துக்கு சீல்

பொள்ளாச்சி

அனுமதி இல்லாமல் செயல்பட்ட மருத்துவ ஆய்வகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஆய்வகத்துக்கு சீல்

பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் ஒரு தனியார் மருத்துவ ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ ஆய்வகம் முறையான அனுமதி பெறாமல் செயல்படுவதாக புகார் வந்தது. 

இதை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ராம்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், சிவக்குமார், ஆறுமுகம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் ஆய்வகம் முறையான அனுமதி பெறாமல் செயல் பட்டது தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அந்த மருத்துவ ஆய்வகத்தை பூட்டி சீல் வைத்தனர். 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

மருத்துவ ஆய்வகத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றவில்லை. மேலும் ஆய்வகத்தில் பயன் படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களான கொரோனா பாது காப்பு உபகரணங்கள், கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட இதர மருத்துவ கழிவுகள் முறையாக அகற்றவில்லை. அரசின் வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால் தொற்று பரவும் அபாயம் இருந்தது. 

எனவே பொது சுகாதாரம் கருதி அந்த மருத்துவ ஆய்வகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் உடல் பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், காமாட்சி நகர், வடுகபாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை பயன்படுத்தி கொள்ளலாம். கொரோனா விதிமுறைகளை மீறும் ஆய்வகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story