வங்கி பெண் மேலாளரை மிரட்டிய வாலிபருக்கு தர்ம அடி
காதலிக்க சொல்லி வங்கி பெண் மேலாளரை மிரட்டிய வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
காதலிக்க சொல்லி வங்கி பெண் மேலாளரை மிரட்டிய வாலிபருக்கு தர்ம அடி விழுந்தது.
மிரட்டல்
பெருந்துறை வி.சி.வி நகரில் வசித்து வருபவர் நாச்சிமுத்து. இவருடைய மகள் சவுமியா (வயது 28). காஞ்சிக்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த சிவநாதன் என்பவரின் மகன் கார்த்திக் (31). இவர் சவுமியாவின் செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு தன்னை காதலிக்க சொல்லி வாட்ஸ்-அப் தகவல்கள் அனுப்பியுள்ளார். அதற்கு சவுமியா மறுத்துள்ளார். இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கார்த்திக் சவுமியா பணிபுரியும் வங்கிக்கே நேரில் சென்று, தன்னை காதலிக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சவுமியா இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளார்கள். இதற்கிடையே 15 நாட்களுக்கு பிறகு கார்த்திக் ஜாமீனில் வந்துள்ளார்.
தர்ம அடி
அதன்பின்னர் நேற்று காலை பெருந்துறையில் உள்ள சவுமியாவின் வீட்டிற்குச் சென்ற கார்த்திக்,, வீட்டின் முன்புறம் நின்று கொண்டு சவுமியாவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் கார்த்திக்கை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தப்பி ஓடியுள்ளார். ஆனாலும் விடாது துரத்தி பிடித்த பொதுமக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளார்கள். பின்னர் அவரை பெருந்துறை போலீசில் ஒப்படைத்தார்கள்.
இதையடுத்து கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திக்கை மீண்டும் கைது செய்தார்கள்.
Related Tags :
Next Story