ரெயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


ரெயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Dec 2021 1:49 AM IST (Updated: 1 Dec 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலத்தில் இருந்து நேற்று மதியம் ஈரோட்டுக்கு சரக்கு ரெயில் வந்தது.அந்த ரெயிலின் என்ஜினின் முன்பகுதியில் ஒரு பாம்பு புகுந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர்கள் உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் என்ஜின் பகுதி மற்றும் தண்டவாளத்தில் பாம்பை தேடினார்கள். பாம்பு தென்படவில்லை. எனவே பாம்பை தேடும்பணியை கைவிட்டு அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே ரெயில் என்ஜினில் புகுந்த பாம்பை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். ஈரோடு ரெயில்நிலையத்தில் என்ஜினில் பாம்பு புகுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story