புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா்பெட்டி
சாலைகளை ஆக்கிரமிக்கும் விளம்பர பதாகை (படம்)
ஈரோடு மாநகர் பகுதி மிகவும் வாகன நெரிசல் மிகுந்ததாக காணப்படுகிறது. குறுகிய ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதால் இதுபோன்று பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுபோல் ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதி மேட்டூர் ரோட்டில் உள்ள கடைகளின் விளம்பர பதாகைகளை ரோட்டை ஆக்கிரமித்து வைப்பதால், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்துகிறார்கள். இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகிறது. இதுபோன்று மாநகர் பகுதியில் பல ரோடுகளில் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகன நிறுத்தங்களை முறைப்படுத்த வேண்டும்.
மகேந்திரன், ஈரோடு.
தார்சாலை அமைக்க வேண்டும்
அம்மாபேட்டை ஒன்றியம் மாணிக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தொட்டிபாளையத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சுடுகாட்டுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. உடனே ரோட்டை சீரமைத்து தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சு.சிலம்பரசன், தொட்டிபாளையாம்.
கால்வாய் ஆக்கிரமிப்பு
அவல்பூந்துறையில் இருந்து பண்ணைக்கிணறு செல்லும் சாலையில் பூவாண்டி வலசு பகுதி உள்ளது. இங்குள்ள மழைநீர் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வசதியில்லாமல் உள்ளது. மேலும் போக்குவரத்துக்கும் சிரமமாக உள்ளது. கழிவுநீர் தங்கு தடையின்றி செல்லவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
பி.கவுதமன், எலவனத்தம்.
தேங்கும் கழிவுநீர்
குமரவலசு ஊராட்சியில் உள்ளது கவுசப்பாளி. இங்குள்ள பஸ் நிலையத்தின் அருகே கழிவு நீர், முழுவதும் பல ஆண்டுகளாக தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவி வருகிறது. கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கவுசப்பாளி.
ஆபத்தான குழி
ஈரோடு திருநகர் காலனி தபால் நிலையம் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை கால்வாயை சரி செய்வதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் இன்று வரை மூடப்படாமல் உள்ளது. இதனால் அடிக்கடி அந்தப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது. 4 சக்கர வாகனங்களில் செல்லமுடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே ஆபத்தான இந்த குழியை மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருள்மணி, கருங்கல்பாளையம், ஈரோடு.
பாலம் சீரமைக்கப்படுமா?
அந்தியூரில் கெட்டி விநாயகர் கோவில் அருகே உள்ள சிறிய பாலம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலம் பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. கன மழை பெய்தால் இடிந்து பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணபதி, அந்தியூர்.
--------------
Related Tags :
Next Story