கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தார்கள்.
கொடுமுடியில் உள்ள பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவிலில் மொத்தம் 20 உண்டியல்கள் உள்ளன. இந்த நிலையில் காணிக்கை எண்ணுவதற்காக நேற்று முன்தினம் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ரமேஷ் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது.
இந்த உண்டியல்களில் மொத்தம் 13 லட்சத்து 21 ஆயிரத்து 10 ரூபாயும், 65 கிராம் தங்கமும், 340 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தன. காணிக்கை எண்ணும் பணியில் எஸ்.எஸ்.வி. பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணும் பணியை ஆய்வாளர் தேன்மொழி மேற்பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை கொடுமுடி கோவில் செயல் அலுவலர் ரமேஷ் செய்திருந்தார்.
Related Tags :
Next Story