பர்கூர் மலைப்பகுதியில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தானாக வெளியேறும் தண்ணீர்


பர்கூர் மலைப்பகுதியில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தானாக வெளியேறும் தண்ணீர்
x
தினத்தந்தி 1 Dec 2021 9:19 PM IST (Updated: 1 Dec 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் மலைப்பகுதியில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் தானாக வெளியேறியது.

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி துருசனாம்பாளையம் மலை கிராமத்தில் ஊராட்சியின் மூலம் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அதன் மூலம் அந்த பகுதி கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆழ்குழாய் கிணறு அமைந்துள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கடந்த சில நாட்களாக ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் தானாக வெளியேறி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘இதுபோல் கோடைகாலத்திலும் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் தானாக வெளியேறி வருகிறது’ என்றனர்.

Next Story