சாராயம் காய்ச்சியதாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது


சாராயம் காய்ச்சியதாக  கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Dec 2021 11:07 PM IST (Updated: 1 Dec 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

சாராயம் காய்ச்சியதாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பெரியூர் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்தபோது 3 பேர் சாராயம் காய்ச்சிக்கொண்டு இருப்பது தெரிந்தது. உடனே போலீசார் 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தார்கள். அதில் அவர்கள் உக்கரம் பெரியார் நகரைச் சேர்ந்த தங்கவேல் (வயது 44), அவருடைய மனைவி வசந்தி (39) மற்றும் ஆறுமுகம் (46) ஆகியோர் என்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 150 லிட்டர் சாராய ஊறலையும், 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தார்கள். 
1 More update

Next Story