போலி ஆவணங்கள் மூலம் ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு


போலி ஆவணங்கள் மூலம் ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2021 3:11 PM IST (Updated: 2 Dec 2021 3:11 PM IST)
t-max-icont-min-icon

ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டனர் என்றும், உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கொடுத்தார்.

சென்னை பனையூர் பகுதியைச்சேர்ந்தவர் ரேவதி (வயது 63). இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகார் மனுவில், தனக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விட்டனர் என்றும், உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். நில அபகரிப்பில் ஈடுபட்டதாக ஜான்ஜேக்கப் (45), ராஜ்குமார் (52) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story