ஐகோர்ட்டு உத்தரவின்படி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் தயார்


ஐகோர்ட்டு உத்தரவின்படி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் தயார்
x
தினத்தந்தி 2 Dec 2021 3:47 PM IST (Updated: 2 Dec 2021 3:47 PM IST)
t-max-icont-min-icon

தக்காளி விலை திடீரென அதிகரித்த நிலையில் சென்னை கோயம்பேடு தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கோயம்பேட்டில் தக்காளி விற்பதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து சி.எம்.டி.ஏ நிர்வாகம் கோயம்பேடு சந்தையில் 14-வது நுழைவு வாயில் அருகே ஒரு ஏக்கர் இடத்தை தக்காளி மைதானமாக செயல்பட தற்காலிகமாக ஒதுக்கி லாரிகள் வந்து செல்ல தயார் நிலையில் வைத்துள்ளது.

இந்தநிலையில், லாரிகள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட மைதானம் சுகாதாரமற்ற முறையிலும், சேறும் சகதியுமாக இருப்பதால் லாரியை நிறுத்த முடியாத சூழல் இருப்பதாகவும், மைதானத்துக்குள் லாரிகளை கொண்டு வந்தால் லாரி டயர்கள் சேற்றில் புதைந்து கொள்ளும் நிலை இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். எனவே, நல்ல முறையில் மைதானத்தை சீரமைத்து தர வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story