விவசாயிகள் அதிக மகசூலை பெற விதை பரிசோதனை செய்து பயிரிடுங்கள்


விவசாயிகள் அதிக மகசூலை பெற விதை பரிசோதனை செய்து பயிரிடுங்கள்
x
தினத்தந்தி 2 Dec 2021 6:26 PM IST (Updated: 2 Dec 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் விதைப்பரிசோதனை அலுவலர் பெ.ராஜகிரி, வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம், பஞ்சுப்பேட்டையில் இயங்கி வரும் விதைப்பரிசோதனை நிலையத்தில் விதைப்பகுப்பாய்வு செய்து விதையின் தரம் உறுதி செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் வரையில் சான்று விதைமாதிரிகள் 487 பெறப்பட்டு 477 விதைமாதிரிகள் பகுப்பாய்வு செய்து 41 மாதிரிகள் தரமற்றவை எனவும், ஆய்வு விதைமாதிரி 663 பெறப்பட்டு 623 பகுப்பாய்வு செய்து 25 மாதிரிகள் தரமற்றவை எனவும், பணி விதை மாதிரியில் 242 ஆய்வு செய்ததில் 55 மாதிரிகள் தரமற்றவை என 121 மாதிரிகள் பகுப்பாய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நல்ல மழை பெய்து வருவதால் விதையின் தரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஈரப்பதத்தினை சரிவர பராமரிக்க, நீர் புகா பையில் சேமித்து வைக்கவும், தரையிலிருந்து கட்டை சேமிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.அவ்வாறு பராமரிப்பதால் பூஞ்சான் தொற்று மற்றும் நோயிலிருந்து பயிரினை பாதுகாத்து விளைச்சலை அதிகரிக்கலாம். விவசாயிகள் அதிக மகசூலை பெற விதை பரிசோதனை செய்து பயிரிடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story