தூத்துக்குடிக்கு நேற்று வந்த முதல் அமைச்சர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
தூத்துக்குடிக்கு நேற்று வந்த முதல் அமைச்சர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு மதியம் 1.45 மணிக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ மற்றும் கட்சி நிர்வாகிகள் புத்தகங்களை கொடுத்து வரவேற்றனர்.
சபாநாயகர்
வரவேற்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்ததலைவர் அருணாசலம், துணை செயலாளர்ஆறுமுகபெருமாள், தி.மு.க பிரமுகர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களுடன் புகைப்படம்
பின்னர் ஆய்வுப்பணிகளை முடித்து விட்டு மு.க.ஸ்டாலின் எட்டயபுரம் வழியாக காரில் மதுரைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.
எட்டயபுரத்தில் வந்த போது தமிழ் பாப்திஸ்து தொடக்க பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடம் அணிந்து சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்தார். உடனடியாக மு.க.ஸ்டாலின் காரை நிறுத்தி கீழே இறங்கி மாணவர்களுடன் சில நிமிடங்கள் உரையாடினார். நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருைகயை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story