பவானிசாகர் அருகே தனியார் ஆலை கழிவுநீர் பவானி ஆற்றில் கலப்பு; நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

பவானிசாகர் அருகே தனியார் ஆலைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீர் பவானி ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே தனியார் ஆலைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீர் பவானி ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கழிவுநீர்
பவானிசாகர் பகுதியில் பல்வேறு தனியார் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளின் கழிவு நீர் நிலத்தடி நீருடன் கலந்ததால் கொத்தமங்கலம், புதுப்பீர்கடவு, கொக்கரகுண்டி, பசுவபாளையம், ராஜன் நகர், பகுத்தம்பாளையம், இக்கரை தத்தப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீரின் தன்மை கெட்டு விட்டதுடன், குடிப்பதற்கு தகுதியற்ற நீராக மாறிவிட்டது.
மேலும் இந்த தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பாய்ச்சுவதால் இதில் விளையும் கரும்பு, வாழை, மஞ்சள், மல்லிகைப்பூ உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இந்த தண்ணீரை குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏற்கனவே குற்றம் சாட்டி வந்தனர்.
மழைநீருடன்...
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி அந்த பகுதியில் உள்ள ஆலைகளில் உள்ள கழிவுநீரானது இரவு நேரங்களில் வெளியேற்றப்பட்டு மழை நீர் செல்லும் ஓடைகள் மற்றும் பள்ளங்களில் திறந்துவிடப்படுகின்றன. இதனால் ஓடைகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து கருப்பு நிறத்தில் நுரை பொங்க ஓடுகிறது. இந்த கழிவுநீரானது ஓடைகள் வழியாக இக்கரை தத்தப்பள்ளி பகுதியில் பவானி ஆற்றில் கலந்து விடுகின்றன.
நோய் பரவும் அபாயம்
இதனால் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பவானி ஆற்று தண்ணீரை குடிக்கும் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
எனவே பவானிசாகர் பகுதியில் கழிவு நீரை பவானி ஆற்றில் கலக்கும் வகையில் திறந்து விடும் தனியார் ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






