ஈரோடு கனிம வள உதவி இயக்குனர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தர்ணா
ஈரோடு கனிம வள உதவி இயக்குனர் அலுவலகத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
ஈரோடு கனிம வள உதவி இயக்குனர் அலுவலகத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 7-வது மாடியில் கனிம வள உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு வழங்குவதற்காக, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் நேற்று மதியம் வந்தார்.
அப்போது அங்கு இருந்த உதவி இயக்குனர், அந்த மனுவை வாங்க மறுத்து அலுவலகத்தில் இருந்து வெளியேறி விட்டார். அதிகாரி மனுவை பெறாமல் சென்றதை பார்த்து அதிருப்தி அடைந்த முகிலன், உதவி இயக்குனர் அலுவலக நுழைவு வாயிலிலேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கல்குவாரிகள்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முகிலனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அலுவலக புவியியலாளர் அலுவலக ஊழியர்கள் முகிலனிடம் வருத்தம் தெரிவித்து, மனுவை பெற்றுக்கொண்டனர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றார்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட முகிலன் கூறும்போது, ‘ஈரோடு மாவட்டத்தில் முறையாக அனுமதி பெற்று செயல்படும் குவாரிகள், கல் உடைக்கும் இடங்கள் உள்ளிட்ட விபரங்களை தனக்கு வழங்க வேண்டும். குவாரி உள்ளிட்டவைகள் பெற்றுள்ள அனுமதிக்கான நாட்கள் அடங்கிய விபரங்களை கேட்டு, தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுவாக நேரில் வழங்க வந்தேன். ஆனால் அதிகாரி எனது மனுவை வாங்காமல் எழுந்து சென்று விட்டார். இதனால் நான் போராட்டத்தில் ஈடுபட்டேன்’ என்றார்.
Related Tags :
Next Story