தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
விபத்து ஏற்படுத்தும் சாலை
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட முத்தம்பாளையம் பகுதி-1, முத்தம்பாளையம் பகுதி-2 மற்றும் சங்கந்துறை பகுதிகளை இணைக்கும் ரோடு மிகவும் பழுதடைந்து உள்ளது. குண்டும் குழியுமான இந்த ரோட்டில் மழை நீர் தேங்கி, சாலை இன்னும் மோசமாகி வருகிறது. இந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் அடிக்கடி தடுமாறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே சாலையை செப்பனிட்டு சீரமைக்க வேண்டும்.
இந்திரகுமார், ஈரோடு.
சாலையில் தேங்கும் சாக்கடை
ஈரோடு சோலார் முனியப்பன்கோவில் அருகே உள்ள சாலையில் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் தேங்கும் சாக்கடை கழிவுநீரையொட்டி புதர் காணப்படுகிறது. இங்கு விஷ பாம்புகள், பூச்சிகள் நடமாட்டம் உள்ளன. எனவே கழிவுநீர் சாலையில் தேங்காமல் தங்கு தடையின்றி செல்லவும், புதரை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேபி, சோலார்.
குவிந்து கிடக்கும் குப்பை
ஈரோடு அருகே பெருந்துறைரோட்டில் இருந்து நஞ்சனாபுரம் செல்லும் சாலையின் ஓரமாக குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், நஞ்சனாபுரம்.
முட்புதர் அகற்றப்படுமா?
நம்பியூர் தாலுகா ரங்கநாதபுரத்தில் உள்ள சுடுகாட்டுக்கு செல்ல பாதை உள்ளது. அந்த பாதை முழுவதும் முட்புதர்கள் வளர்ந்து ஆட்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. மேலும் சுடுகாட்டை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது. எனவே முட்புதர்கள் மற்றும் புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், ரங்கநாதபுரம்.
மயான வசதி இல்லை
அம்மாபேட்டை ஒன்றியம் மாணிக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி தொட்டிபாளையம். இ்ங்கு 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு மயான வசதி இல்லை. எனவே மயான வசதியை ஏற்படுத்தி கொடுக்க சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.
பொதுமக்கள், தொட்டிபாளையம்.
மின் விளக்கு எரியவில்லை
கொமராபாளையம் ஊராட்சி சிவியார்பாளையம் ஆலத்துக்கோம்பை செல்லும் ரோட்டில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள மின் கம்பத்தில் மின் விளக்கு கடந்த 10 நாட்களாக எரியவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மின் விளக்கு எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவியார்பாளையம்.
Related Tags :
Next Story






