ஒரகடம் அருகே வாகன சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி


ஒரகடம் அருகே வாகன சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 3 Dec 2021 5:13 PM IST (Updated: 3 Dec 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

ஒரகடம் அருகே வாகன சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்.

படப்பை,

சென்னை அடுத்த பழந்தண்டலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (வயது 30). இவர் வாலாஜாபாத் பகுதியில் தங்கியிருந்து டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

ஓரகடம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி

விழுந்ததில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனத்தின் சக்கரத்தில் ஜோசப்ராஜ் சிக்கினார்.

இதில் ஜோசப் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் அவரது உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story