உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் விவசாயிகள் குடியேறும் போராட்டம்

உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் விவசாயிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டாா்கள்.
ஈரோடு
நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணியினை மீண்டும் தொடங்கக்கூடாது, கடந்த ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட மின்கோபுரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக சாலையோரமாக கேபிள் அமைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஈரோடு மேட்டுக்கடை பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ள பகுதியில் விவசாயிகள் குடியேறும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story






