தினத்தந்தி புகாா் பெட்டி


தினத்தந்தி புகாா் பெட்டி
x
தினத்தந்தி 4 Dec 2021 2:42 AM IST (Updated: 4 Dec 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகாா் பெட்டி

குண்டும்-குழியுமான சாலை 
ஈரோடு சூளையில் இருந்து முதலித்தோட்டம் செல்லும் ரோடு குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் ரோட்டில் போக முடியவில்லை. மேலும் மழைக்காலங்களில் தண்ணீ்ர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் குண்டும்-குழியுமான சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், சூளை, ஈரோடு.

குதிரைகளால் போக்குவரத்துக்கு இடையூறு
அந்தியூர் பஸ் நிலைய பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித்திரிகின்றன. இந்த குதிரைகள் ரோட்டில் அங்கும், இங்குமாக அலைவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ரகுநாதன், அந்தியூர்.


ரவுண்டானாவில் செடிகள்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா கட்டப்பட்டு உள்ளது. பர்கூர், கோபி, பவானி ஆகிய ஊர்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் இந்த ரவுண்டானாவை சுற்றியே செல்கின்றன. இந்த நிலையில் ரவுண்டானாவில் அழகுக்காக செடிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த செடிகள் நன்றாக உயரமாக வளர்ந்து உள்ளன. ரவுண்டானவை சுற்றி வரும் வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு செடிகள் வளர்ந்து உள்ளதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே விபத்து ஏற்படுவதை தடுக்க ரவுண்டானாவில் வளர்ந்து உள்ள செடிகளை கொஞ்சம் வெட்டி சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், அந்தியூர்.


வெளியேறும் கழிவுநீர்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள வீதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீ்ர் வெளியே வருகிறது. அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் உள்ள வீடுகளில் பொதுமக்கள் இருக்க முடியவில்லை. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இதை சரிசெய்யவேண்டும்.
அருள்மணி, ஈரோடு.

தெருவிளக்கு ஒளிருமா?
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள தெருவிளக்குகளும், பூர்ணா ஆட்டோ நிறுத்தம் அருகிலும், வெங்கிடுசாமி வீதியிலும் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. எனவே அந்த வீதிகளில் உள்ள தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனசீலன், ஈரோடு.




பாராட்டு
கவுந்தப்பாடி ஊராட்சி அய்யம்பாளையத்தில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு முட்புதர்கள் நிறைந்து காணப்பட்டது. இதனால் இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு கொண்டு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதுபற்றிய செய்தி தினத்தந்தி நாளிதழில் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அய்யம்பாளையம் சுடுகாடு பகுதியில் உள்ள முட்புதர்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. எனவே செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த கவுந்தப்பாடி ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், அய்யம்பாளையம்.

Next Story