விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்ேகாரி புஞ்சைபுளியம்பட்டி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்ேகாரி புஞ்சைபுளியம்பட்டி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்து
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து விண்ணப்பள்ளிக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். விண்ணப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த காரும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வெங்கடாசலம் படுகாயம் அடைந்தார். விபத்தை கண்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த வெங்கடாசலத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அங்குள்ள கோவை- சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், புஞ்சைபுளியம்பட்டி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் சாலை விபத்து அடிக்கடி நடைபெறுகிறது. விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்ைத ஏற்படுத்தியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். அதற்கு போலீசார் பதில் அளிக்கையில், ‘விபத்து ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தை ஏற்படுத்தியவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக கோவை- சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story