தினத்தந்தி புகாா் பெட்டி செய்தி

தினத்தந்தி புகாா் பெட்டி
சாக்கடை வடிகால் வேண்டும் (படம்)
கோபி கோகுலம் நகரில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுநீருடன் தற்போது மழைநீரும் தேங்கி நிற்பதால் அங்கு கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கோகுலம் நகரில் சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோகுலம் நகர்.
சாக்கடை வசதி வேண்டும்
ஈரோடு பெரிய சேமூர் சி.எஸ்.நகர் விரிவாக்க பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் இந்த பகுதியில் சாக்கடை வசதி இல்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்து உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாக்கடை கழிவுநீரில் நடந்து வரவேண்டிய அவல நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சி.எஸ்.நகர்.
குவிந்து கிடக்கும் குப்பை
கோபி டவுன் புதுப்பாளையம் கமலா ரைஸ்மில் வீதியின் கிழக்கே ஒரு இணைப்பு சாலை சென்று ஈரோடு மெயின் ரோட்டை அடைகிறது. அந்த இணைப்பு சாலையில் ரோட்டின் ஓரமாக கடந்த 2 மாதங்களாக செடி, கொடிகள் மற்றும் பல்வேறு குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள், கோபி.
வெளியேறும் கழிவுநீர்
ஈரோடு 20-வது வார்டுக்கு உட்பட்ட மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்தப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியே ெசல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. கொசு தொல்லையும் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன், ஈரோடு.
தொங்கும் மின் ஒயர்கள்
புஞ்சைபுளியம்பட்டி அருகே நல்லூர் ஊராட்சி நேரு நகர் 3-வது வீதியில் மின் ஒயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் எங்கள் பகுதியில் சாக்கடை வடிகால் வசதியே இல்லை. குப்பைகள் தேங்கி கிடக்கிறது. எனவே எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நல்லூர்.
தெருவிளக்கு ஒளிருமா?
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள தெருவிளக்குகளும், பூர்ணா ஆட்டோ நிறுத்தம் அருகிலும், வெங்கிடுசாமி வீதியிலும் உள்ள தெருவிளக்குகள் சரிவர எரியவில்லை. எனவே அந்த வீதிகளில் உள்ள தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனசீலன், ஈரோடு.
ரோடு சீரமைக்கப்படுமா?
பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்தில் இருந்து சாவடிப்பாளையம் மற்றும் ஆயக்கவுண்டம்பாளையம் செல்லும் ரோடு கடந்த 6 மாதங்களாக மோசமான நிலையில் உள்ளது. தற்போது ரோட்டில் கற்களை கொட்டி சென்றுள்ளனர். இது பொது மக்களுக்கும் மற்றும் வழியில் செல்பவர்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடனே ரோட்டை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விஜயமங்கலம்.
பள்ளிக்கூடம் தரம் உயர்த்தப்படுமா?
அம்மாபேட்டை ஒன்றியத்தில் குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏழை எளிய மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் மேல்நிலைப் படிப்பை தொடர 10 கி.மீ செல்ல வேண்டும். எனவே மாணவர்கள் நலன் கருதி குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியை அரசு மேல்நிலைப்பள்ளியாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சு.சிலம்பரசன், தொட்டிபாளையம்.
Related Tags :
Next Story






