ஒரத்தூர் ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்க விழா


ஒரத்தூர் ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்க விழா
x
தினத்தந்தி 5 Dec 2021 4:19 PM IST (Updated: 5 Dec 2021 4:19 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி சுந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், வட்டார கல்வி அலுவலர் பாலாமணி, ஒன்றிய துணைச் செயலாளர் செல்வி பார்த்தசாரதி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பூங்கோதை பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் கலந்துகொண்டு இல்லம் தேடி கல்வி திட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் 38 பேருக்கு இனிப்பு வழங்கி பென்சில், பேனா, ரப்பர் உள்ளிட்ட பொருட்களை வழங்கி இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து சிறப்புரையாற்றினார்.

இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள், பள்ளி தலைமையாசிரியர் ரத்தினகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story