வீரத்திற்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு


வீரத்திற்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 5 Dec 2021 4:47 PM IST (Updated: 5 Dec 2021 4:47 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2022-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று உயிர், உடமை போன்றவற்றைக் காப்பாற்றுவதில் துணிச்சலான செயல் புரிந்தமைக்கான வீரத்திற்கான அண்ணா பதக்கம் முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது.

மாநில அளவில் தேர்வு செய்யும் தலா 3 நபர்கள் (பொது மக்களுக்கும் மற்றும் 3 அரசு ஊழியர்களுக்கும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் போன்றவை வழங்கப்பட உள்ளது.

அண்ணா பதக்கத்திற்கான விண்ணப்ப படிவம் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உயிர், உடைமை போன்றவற்றை காப்பாற்றுவதில் துணிச்சலான செயல் செய்ததற்கான விவரத்தை ஆங்கிலம் மற்றும் தமிழில் விரிவான அறிக்கையை படிவத்துடன் பூர்த்தி செய்து பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பழைய ரெயில்வே ரோடு, காஞ்சீபுரம் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் இந்த மாதம் 9-ந்தேதி மாலை 5 மணிக்குள் 3 நகல்கள் சமர்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 7401703481 தொடர்புக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story