கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி


கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 5 Dec 2021 5:31 PM IST (Updated: 5 Dec 2021 5:31 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் வில்லிவலம் கிராமம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற கூலி தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.

குளிக்க சென்றவர்

காஞ்சீபுரம் மாவட்டம் வில்லிவலம் கிராமம், சின்ன தெருவை சேர்ந்தவர் துரை (வயது 55). கூலித்தொழிலாளி வாய் பேச முடியாதவர் மற்றும் வலிப்பு நோய் உள்ளவர்.

இவர் நேற்று தேசிய ஊரக வேலை திட்ட பணிக்கு சென்று விட்டு குளிப்பதற்காக அதே கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு சென்றார். குளித்து கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டு கிணத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

உடல் மீட்பு

அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story