குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பல்வேறு கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகளில் சம்மந்தப்பட்டவரான காஞ்சீபுரம், தேனம்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்ற சச்சின் (வயது 24) தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்திக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர், சரவணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story