ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக  59 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Dec 2021 2:10 AM IST (Updated: 6 Dec 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 524 பேருக்கு பரிசோதனை செய்ததில் 57 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 600 ஆக உயர்ந்தது.
மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 67 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 147 ஆக உயர்ந்தது. இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 699 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 754 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story