செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு


செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 6 Dec 2021 3:43 PM IST (Updated: 6 Dec 2021 3:43 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் வேளாண் உற்பத்திக்கு வழங்கும் குறுகிய கால பயிர் கடன், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பதற்கு விவசாயிகளுக்கு நடைமுறை மூலதனமாக கடன் வசதியை விரிவுபடுத்தி மத்திய அரசின் மூலம் நிலையான இயக்க செயல் முறைகள் வழங்கப்பட்டுள்ளன. நடைமுறை மூலதன கடனாக பால்பண்ணை, ஆடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றில் வழங்கப்படுகிறது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளின் நிதி ஆதாரங்களை பெருக்கும் விதமாக கிசான் கடன் அட்டைகள் வழங்கிட முகாம்கள் நடத்தப்படவுள்ளது, அதன் அடிப்படையில் மாவட்டத்திலுள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்துடன் புகைப்படம், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் போன்றவற்றை இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது அரசினர் கால்நடை கிளை நிலையத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story