மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்சலி


மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்சலி
x
தினத்தந்தி 6 Dec 2021 7:27 PM IST (Updated: 6 Dec 2021 7:27 PM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது.

இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தைச் சேர்ந்த முருக்கம்பட்டு, மாம்பாக்கம், மத்தூர், கிருஷ்ணசமுத்திரம், வேலஞ்சேரி, கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை, ராஜா நகரம் ஆகிய பகுதிகளில் முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான திருத்தணி கோ.அரி கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர், பள்ளிப்பட்டு தாலுகாவைச் சேர்ந்த அத்திமாஞ்சேரி பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.மொத்தம் 3 ஆயிரம் பேருக்கு இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜெயவேலு, பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன், பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story