ஈரோடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.200-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
காய்கறிகள் வரத்து குறைவு
சத்தியமங்கலம், தாளவாடி, உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டுக்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும், நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக கத்திரிக்காய், பீன்ஸ், அவரை, முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை ஒரு கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனையாகி வருகிறது.
முருங்கைக்காய் ரூ.200-க்கு விற்பனை
குறிப்பாக முருங்கைக்காயின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனையான முருங்கைக்காய் நேற்று ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு தினமும் 3 டன் முருங்கைக்காய் விற்பனைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது மழை காரணமாக வரத்து குறைந்து 350 முதல் 500 கிலோ வரை மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாகவே நேற்று முருங்கைக்காய் விலை ரூ.200-ஐ எட்டியுள்ளது. இதேபோல மற்ற காய்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:
கத்திரிக்காய் –ரூ.130, பீன்ஸ் –ரூ.100, பீர்க்கங்காய்-ரூ.80, புடலங்காய்-ரூ.80 வெண்டைக்காய் ரூ.80, பச்சை மிளகாய்- ரூ.80, முட்டைக்கோஸ் –ரூ.50, கேரட் –ரூ.70, பீட்ரூட் –ரூ.80, பட்டை அவரை –ரூ.100, கருப்பு அவரை –ரூ.130, சின்ன வெங்காயம் – ரூ.50, பெரிய வெங்காயம் –ரூ.45, தக்காளி –ரூ.100.
Related Tags :
Next Story