வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கைது செய்தனர்.
சென்னை மண்ணடி ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 44). இவரிடம் ராயபுரத்தை சேர்ந்த சரோஜா (43) என்பவர் தான், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அதிகாரியாக வேலை செய்து வருவதாகவும், தனது கூட்டாளிகளான புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் (45), ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த வெங்கடேசன் (41) ஆகியோருடன் சேர்ந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கி தருவதாக கூறி முனியசாமியிடம் ரூ.12 லட்சம் பெற்றார்.
பின்னர் செம்மஞ்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ததுபோல் போலியான ஆவணம் மற்றும் வீட்டு சாவியை கொடுத்து 3 பேரும் மோசடி செய்து விட்டதாக முத்தியால்பேட்டை போலீசில் முனியசாமி புகார் செய்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட சரோஜா, ஆறுமுகம், வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான ஜெகதீஸ் என்பவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story