கூடுவாஞ்சேரியில் கோர்ட்டு அமைக்க வக்கீல்கள் கோரிக்கை


கூடுவாஞ்சேரியில் கோர்ட்டு அமைக்க வக்கீல்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2021 4:18 PM IST (Updated: 7 Dec 2021 4:18 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா வக்கீல்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வக்கீல்கள் ஜி.கே.லோகநாதன் தலைமை தாங்கினார். சுந்தரமூர்த்தி, கேசவலு, ஜெயசாமுவேல், சந்தானம், உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், போலீஸ் நிலையங்களில் வக்கீல்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதற்கு நிரந்தர தீர்வு காண்பது. கூடுவாஞ்சேரியில் நடுவர் கோர்ட்டு அமைக்க கோரி தமிழக அரசுக்கும், சட்டத்துறை, மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டின் கவனத்திற்கும் கொண்டு செல்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் வக்கீல்கள் ராமசாமி, ஆறுமுகம், அனிதா உள்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story