பசுமாட்டை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் மூழ்கி விவசாயி பலி
செய்யூர் அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற முயன்ற விவசாயி நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
விவசாயி
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த வேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் துலுக்கானம் (வயது 78). விவசாயி. இவர் நேற்று தான் வளர்த்து வந்த கால்நடைகளை அப்பகுதி வயலில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். அப்போது அவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று எதிர்பாராதவிதமாக அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.
இதையடுத்து கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருக்கு போராடியபடி நீரில் தத்தளித்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த துலுக்கானம் மாட்டை காப்பாற்ற வேண்டிய நோக்கில் கிணற்றில் குதித்தார்.இந்த நிலையில் அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி தத்தளித்தார்.
பரிதாப பலி
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் செய்யூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்கு காலதாமதமானதால் கிணற்று நீரில் மூழ்கி விவசாயி பரிதாபமாக பலியானார். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் இறந்து போன துலுக்கானத்தின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து அறிந்த செய்யூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துலுக்கானத்தின் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story