திருவள்ளூரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திரைப்படம் பார்த்த கலெக்டர்


திருவள்ளூரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் திரைப்படம் பார்த்த கலெக்டர்
x
தினத்தந்தி 7 Dec 2021 2:38 PM GMT (Updated: 7 Dec 2021 2:38 PM GMT)

திருவள்ளூரில் உள்ள எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோருடன் அங்குள்ள திரையரங்குக்குள் அமர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் , திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் திரைப்படத்தை கண்டுகளித்தனர்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொதுமக்களிடையே சமத்துவத்தை நிலை நிறுத்தும் வகையிம், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவள்ளூரில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என 50-க்கும் மேற்பட்டோருடன் அங்குள்ள திரையரங்குக்குள் அமர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் ஆகியோர் திரைப்படத்தை கண்டுகளித்தனர்.

அவர்களுடன் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரமேஷ், மாவட்ட திட்ட பொது மேலாளர் டாக்டர் கவுரி சங்கர், திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


Next Story