தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு


தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Dec 2021 10:58 PM IST (Updated: 7 Dec 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகள் மற்றும் பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளை இணைத்து புதியதாக உருவாக்கப்பட்டு உள்ள தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து சிட்லபாக்கம், மாடம்பாக்கம், தாம்பரம் பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது பொன்னையா கூறியதாவது:-

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பேரூராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியை தீவிரப்படுத்த 15-வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து நிதி பெற்று, புதிய லாரிகள், பேட்டரி வாகனங்கள் வாங்கி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டநிலையில் விடுபட்ட சில இடங்களிலும் பணிகளை விரைவாக முடித்து இன்னும் 1½ மாதத்தில் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், மாநகராட்சி என்ஜினீயர் ஆனந்த ஜோதி, மாநகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.



Next Story