திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2021 2:43 AM IST (Updated: 8 Dec 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகம்-கர்நாடகா இடையே உள்ள முக்கிய வழியான திம்பம் மலைப்பாைதயில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. சாதாரணமாக வரும் வாகனங்கள் கொண்டை ஊசி வளைவுகளை எளிதாக கடந்துவிடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் நின்றுவிடுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. 
தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கும், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று வருகின்றன. அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதால் பயணிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.  
லாரி பழுதானது
இந்தநிலையில் கரூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. நேற்று காலை 8 மணியளவில் திம்பம் மலைப்பாதையின் 26-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்ப முயன்றது. அப்போது பழுதாகி லாரி திரும்ப முடியாமல் நின்றுவிட்டது. 
இதனால் மலைப்பாதையின் இருபுறமும் செல்ல முடியாமல் வாகனங்கள் வரிசையில் நின்றன. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, லாரி பாதையின் ஓரத்துக்கு இழுத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னரே வாகனங்கள் செல்லத்தொடங்கின.
1 More update

Next Story