மூதாட்டிக்கு ‘டீ’யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரூ.6 பவுன் நகை திருட்டு


மூதாட்டிக்கு ‘டீ’யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரூ.6 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 8 Dec 2021 10:37 PM IST (Updated: 8 Dec 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

மூதாட்டிக்கு ‘டீ’யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரூ.6 பவுன் நகை திருட்டு ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு.

செங்குன்றம்,

சென்னை அடுத்த மாதவரம் பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் போஸ்கோ (வயது 61). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது கணவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். போஸ்கோ தனியாக வசித்து வரும் நிலையில், நேற்று தி.நகர் செல்வதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். ஆட்டோ டிரைவர் பாசத்தோடு பேசியதால் அவரை போஸ்கோ வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, ஆட்டோ டிரைவர் போஸ்கோவுக்கு டீ வைத்து கொடுத்துள்ளார். அதை குடித்தவுடன் போஸ்கோ சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ டிரைவர், மூதாட்டி அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டார்.

மயக்கம் தெளிந்து பார்த்தபோது ஆட்டோ டிரைவர் நகைகளை கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்த போஸ்கோ மாதவரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story