செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் வீடு புகுந்து திருடிய அண்ணன், தம்பி கைது


செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் வீடு புகுந்து திருடிய அண்ணன், தம்பி கைது
x
தினத்தந்தி 9 Dec 2021 4:43 PM IST (Updated: 9 Dec 2021 4:43 PM IST)
t-max-icont-min-icon

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் வீடு புகுந்து திருடிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

செம்மஞ்சேரி எழில் நகரை சேர்ந்தவர் திலீப் குமார். சோழிங்கநல்லூர் லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர்கள் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் தங்களின் வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்டிருப்பதாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். திருட்டு சம்பவம் நடைபெற்ற நாட்களில் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் 2 பேர் வீடுகளின் பூட்டை உடைத்து அங்கு உள்ள பொருட்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவானது தெரியவந்தது. இதையடுத்து செம்மஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் நேபாளத்தை சேர்ந்த அண்ணன், தம்பி இருவர் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கேளம்பாக்கத்தில் தங்கியிருந்த அண்ணன் தம்பிகளான பவன் சிங் (வயது 32), ஜெகதீஷ் சிங் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர்களிடமிருந்து ஒரு டிவி, ஒரு ஹோம் தியேட்டர், 2 செல்போன்கள், ஒரு கம்மல் செட், வெள்ளி நகை போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.


Next Story