ஏலச்சீட்டு நடத்தி மோசடி; தந்தை, மகனுக்கு 4 ஆண்டு சிறை: செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
ஏலச்சீட்டு நடத்தியதில் மோசடி உறுதி செய்யப்பட்டதையடுத்து தந்தை, மகன் இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
காஞ்சீபுரம் நாகலூத்து மேடு மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர்களான காதர்கான் (வயது 44), சதீஷ், கவுதம், கங்காதேவி, கார்த்திகேயன் உள்ளிட்ட 9 பேர் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (64), அவரது மகன் சதீஷ் (43) ஆகியோர் அரசு விதிகளை பின்பற்றாமல் நடத்திய ஏலச்சீட்டில் மொத்தம் ரூ.53 லட்சத்து 75 ஆயிரம் செலுத்தியுள்ளனர். இந்த பணத்தை திருப்பி தராததால் அவர்கள் அனைவரும் காஞ்சீபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் சுப்பிரமணியன், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டு இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.
ஏலச்சீட்டு நடத்தியதில் மோசடி உறுதி செய்யப்பட்டதையடுத்து சுப்பிரமணியன், சதீஷ் இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story