பட்டா பிரச்சினைகளுக்கான தீர்வு முகாம்
விவசாயிகளுக்கான கணிணி பட்டா தொடர்பான பெயர் திருத்த பிரச்சினைகளுக்கு பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று தீர்வு காணும் வகையில், கிராம அளவிளான முகாம் நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், செரப்பனஞ்சேரி, வஞ்சுவாஞ்சேரி மற்றும் காரணித்தாங்கல் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கான கணிணி பட்டா தொடர்பான பெயர் திருத்த பிரச்சினைகளுக்கு பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று தீர்வு காணும் வகையில், கிராம அளவிளான முகாம் செரப்பனஞ்சேரி பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் குன்றத்தூர் தாசில்தார் பிரியா தலைமையில் நடைபெற்றது.
மண்டல துணை தாசில்தார்கள் தாட்சாயணி, பாலச்சந்தர், வருவாய் ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story