தனியார் நிறுவனத்தில் ரூ.27லட்சம் லேப்டாப்கள் திருட்டு; 2 பேர் கைது


தனியார் நிறுவனத்தில் ரூ.27லட்சம் லேப்டாப்கள் திருட்டு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2021 8:21 PM IST (Updated: 9 Dec 2021 8:21 PM IST)
t-max-icont-min-icon

குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ரூ.27லட்சம் லேப்டாப்கள் திருட்டு போனது.

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள குத்தம்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்தநிலையில் அந்த தனியார் நிறுவனத்தில் இருந்த ரூ.27 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 12 லேப்டாப்கள் திருட்டு போனது.

இதுகுறித்து மேலாளர் சஞ்சய் மேனன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லேப்டாப்பை திருடியது, திருவள்ளூரை அடுத்த பாப்பன் சத்திரத்தை சேர்ந்த அகில் முரளி (வயது 24) மற்றும் திருவள்ளூர் கீழ்மணம் பேட்டை சேர்ந்த சரவணன் (34) என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 12 லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story