சாராயம் விற்ற 3 பெண்கள் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணி
கீழ்வேளூர் அருகே தேவூர் பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவூர்- இரட்டைமதகடி சாலை கடுவையாறு பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், நாகை வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த மனோகரன் மனைவி முத்துலட்சுமி (வயது 35), தெற்காலத்தூர் நடுத்தெரு காத்தமுத்து மனைவி இந்திராணி (60) என்பதும், இவர்கள் அந்த பகுதியில் சாராயம் விற்றதும் தெரியவந்தது.
3 பெண்கள் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமி, இந்திராணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதே போல் தெற்காலத்தூர் கடுவையாறு வடக்கு தெருவில் சாராயம் விற்ற நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்லபாண்டி மனைவி சத்யா (34) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story