திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள காடமுத்தாண்பட்டியைச் சேர்ந்த தென்னரசு (வயது 56) மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூரில் இருந்து சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஏரியூர் விலக்கு ரோட்டை கடந்த சென்ற போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து தென்னரசு சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சண்முகசுந்தரம் மற்றும் காரை ஓட்டி வந்த பெண் டாக்டர் மோகனாஅட்சயா (30) ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், விபத்துக்கு காரணம் தேசிய நெடுஞ்சாலை வளைவாக செல்வதால் தான். எனவே சாலைைய நேராக செல்ல நடவடிக்கை கோரி மறியலில் ஈடுபட்டனர். துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் சேது ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.