திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை
திண்டுக்கல்லில் நேற்று மழை கொட்டி தீர்த்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் வடகிழக்கு பருவமழை ஒரு மாதத்துக்கு மேலாக நன்றாக பெய்தது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து ஏற்பட்டு குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பின. ஆனால் மழை பெய்த சுவடே தெரியாத அளவுக்கு கடந்த 2 நாட்களாக பகலில் கடுமையான வெயிலும், இரவில் பனிப்பொழிவும் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது.
எனவே மதியம் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தோன்றியது. இதற்கிடையே காலை 10.30 மணிக்கு திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு, சூரியனை மறைத்தது. இதையடுத்து 11 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 20 நிமிடங்கள் வரை கொட்டி தீர்த்தது.
இதைத் தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மீண்டும் நல்ல மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்தபடி இருந்தது. அதன்பின்னர் மாலை 3.50 மணிக்கு மீண்டும் மழை பெய்தது. இந்த முறை 30 நிமிடங்கள் வரை பலத்த மழை பெய்தது. இதனால் நாகல்நகர், ரவுண்டுரோடு, திருச்சி சாலை உள்பட பல இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது. மேலும் விட்டுவிட்டு பெய்த மழையால் வெப்பம் விலகி இதமான குளிர் நிலவியது.
Related Tags :
Next Story