ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்


ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்
x
தினத்தந்தி 10 Dec 2021 3:49 PM IST (Updated: 10 Dec 2021 3:49 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வடமாநில ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் 9 வயது சிறுமி சிறுநீர் பிரச்சினை காரணமாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார். தனி அறையில் இருந்த அந்த சிறுமியிடம், அந்த ஆஸ்பத்திரி ஊழியர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சிறுமி கூச்சல் போடவே, வெளியில் சென்றிருந்த சிறுமியின் தாயார் ஓடிவந்தார். அதற்குள் ஆஸ்பத்திரி ஊழியர் தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குறிப்பிட்ட ஆஸ்பத்திரி ஊழியரான உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மோனுராம் (வயது 26) என்பவரை நேற்று இரவு கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக ஆஸ்பத்திரி உணவகத்தில் அவர் வேலை செய்து வந்தார்.


Next Story