ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் புகார் மனு


ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் புகார் மனு
x
தினத்தந்தி 10 Dec 2021 6:28 PM IST (Updated: 10 Dec 2021 6:28 PM IST)
t-max-icont-min-icon

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

திருவள்ளூரை அடுத்த ஜனப்பஞ்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் நாகபூஷணம் (வயது 72). இவர் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகாபுரம் வாணியஞ்சத்திரம் பகுதியை சேர்ந்த லலிதா, அவரது கணவர் பாபு ஆகிய இருவரும் என்னை அணுகி மாத சீட்டு நடத்தி வருகிறோம், அதில் சேரும்படி தெரிவித்தார்கள். அவர்கள் தெரிவித்தது போல் நான் மாத சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தேன். அவர்கள் இருவரும் ஏலச்சீட்டு நடத்தியது மட்டுமல்லாமல் என்னிடம் அவர்களது குடும்ப தேவைக்காக பணத்தை வாங்கி கொண்டு பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் ஏலத்திற்கான பணம் மற்றும் குடும்ப செலவுக்காக வாங்கிய ரூ.15 லட்சத்தை கேட்டபோது கணவன், மனைவி இருவரும் பணம்தர மறுப்பு தெரிவித்து உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகின்றனர். எனவே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த கணவன், மனைவி மீது நடவடிக்கை எடுத்து தனக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டு தருமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் இதுதொடர்பான புகார் மனுவை நாகபூஷணம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமாரிடமும் அளித்தார்.


Next Story