ஈரோட்டில் வீடு, குடோனில் பதுக்கிய 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; தந்தை -மகன் கைது


ஈரோட்டில் வீடு, குடோனில் பதுக்கிய 800 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; தந்தை -மகன் கைது
x
தினத்தந்தி 11 Dec 2021 2:30 AM IST (Updated: 11 Dec 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் 800 கிலோ புகையிலை பொருட்களை வீடு மற்றும் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த தந்தை -மகனை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
ஈரோட்டில் 800 கிலோ புகையிலை பொருட்களை வீடு மற்றும் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த தந்தை -மகனை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள்
ஈரோடு பொய்யேரிக்கரை ஈஸ்வரன் முருகன் வீதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள ஒரு ஓட்டு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் அந்த வீட்டில் 6 மூட்டைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தந்தை -மகன் கைது
விசாரணையில் அவர்கள் முகமது அனீபா (வயது 51) மற்றும் அவருடைய மகன் முகமது நாபில் மர்ஜித் (27) ஆகியோர் என்பதும், இதில் முகமது அனீபா பெயிண்டர் வேலையும், முகமது நாபில் மர்ஜித் கூலித்தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் ஈரோடு கரூர் ரோடு இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில், புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மொத்தம் 20 மூட்டைகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது. வீடு மற்றும் குடோனில் கண்டுபிடிக்கப்பட்ட 26 மூட்டைகளிலும் மொத்தம் 800 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை -மகன் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 800 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Tags :
Next Story